மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைத் தாக்கிய ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 17 Mar, 2025
மார்ச் 17,
சாலையில் நின்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டியைப் பின்னிருந்து வந்த ஆடவர் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியது தொடர்பாக 25 வயது உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்ட்டுள்ளதாக மத்திய மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் Kota Shahbandar சாலையில் நின்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டியைப் பின்னிருந்து வந்த ஆடவர் தாக்கியதும் மற்ற மோட்டார் சைக்கிளோட்டிகள் கைகலப்பில் ஈடுப்பட்டதாகவும் தாக்குதலைத் தொடங்கிய 25 வயது ஆடவர் இன்று பிற்பகல் 3 மணிக்குக் கைது செய்யப்பட்டதாகவும் மத்திய மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். சாலையில் கடுமையாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதால் கோபத்தில் மோட்டார் சைக்கிளோட்டியைத் தாக்கியதாக 25 வயது தாக்குதல் நடத்திய ஆடவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Seorang lelaki berusia 25 tahun ditahan selepas menyerang penunggang motosikal di Kota Shahbandar, Melaka. Insiden yang tular di media sosial berlaku akibat kemarahan terhadap cara pemanduan mangsa. Polis telah menahan suspek untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *