பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இருவரைக் காவல்துறை தேடுகிறது!

- Sangeetha K Loganathan
- 04 Apr, 2025
ஏப்ரல் 4,
சாலையின் நடுவே பேருந்தை மறித்து பேருந்து ஓட்டுநரை 2 ஆடவர்கள் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகக் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.
பிற்பகல் 3 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் குளுவாங் அருகில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் வாகனத்தின் பின் பகுதியில் சம்மந்தப்பட்ட பேருந்து உரசியதால் கோபமடைந்த வாகனத்திலிருந்த இருவரும் பேருந்தை மறித்து, பேருந்து ஓட்டுநரைச் சரமாரியாகத் தாக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.
Satu video tular menunjukkan dua lelaki menyerang seorang pemandu bas selepas kenderaan mereka dilanggar bas di lebuhraya berhampiran Kluang. Polis sedang menyiasat kejadian dan kini memburu dua suspek terlibat dalam insiden itu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *