காஸாவில் இஸ்ரேலிய வான்படை தாக்குதல்! மலேசியர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர்

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம். மார்ச் 17: காஸாவின் வடக்கு பகுதியான Beit Lahiya பகுதியில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான் தாக்குதலில் மாப்பிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய ஆலோசக மன்றத்தின் மனிதாபிமானப் பணியாளர்கள் எட்டு பேர் உயிரிழந்தனர்.

கடந்த சனிக்கிழமை 1.30 மணியளவில் அக்குழுவினர் அகதிகளின் குடும்பத்தினருக்காக தற்காலிக கூடாரங்களை அமைத்துக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக  மாப்பிம் இயக்கவாதியான டத்தோ சானி அராபி கூறினார்.

சம்பந்தப்பட்ட மனிதாபிமானப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்பதோடு மோசமான போர்க் குற்றமும் ஆகும் என  தெரிவித்த அவர்,  இந்த தாக்குதலில் அப்பாவிகளின் உயிர் பறிபோனதோடு காஸாவில் மனிதாபிமான பணிகளையும் பாதித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் உள்பட எட்டு களப்பணியாளர்கள் கொல்லப்பட்டது குறித்து மாப்பிம் அமைப்பும் அதன் வியூக பங்காளியான அல்-காஹிர் அறக்கட்டறையும் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்!

இந்த வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்துலகச் சமூகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இது காஸா மீதான தாக்குதல் மட்டும் அல்ல. மாறாக அனைத்துலக சமூகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும் என அவர் வர்ணித்தார்.

அப்பாவி மக்களின் உயிர் பறிபோவதை அனைத்துலகச் சமூகம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க கூடாது என்றும் அவர் அவர் வலியுறுத்தினார்.

Lapan petugas kemanusiaan MAPIM terbunuh dalam serangan udara Israel di Beit Lahiya, Gaza, ketika memasang khemah untuk pelarian. MAPIM berkata serangan ini sebagai jenayah perang dan menggesa tindakan segera daripada masyarakat antarabangsa bagi menghentikan keganasan serta menuntut keadilan bagi mangsa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *