குண்டர் கும்பலைச் சேர்ந்த ஆடவர் சுட்டுக் கொலை!

- Sangeetha K Loganathan
- 16 Mar, 2025
மார்ச் 16,
பல்வேறு குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்த 33 வயது ஆடவர் இன்று அதிகாலை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். திரங்கானுவின் கோலா பெசூட் சாலையில் சந்தேகநபரைக் காவல்துறையினர் அடையாளம் கண்ட நிலையில் அவரைக் கைது செய்யும் போது வாகனத்திலிருந்தபடியே காவல்துறையினரை நோக்கி சந்தேக நபர் துப்பாக்கிச் சூட நடத்தியதால் காவல்துறையினர்கள் பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 33 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாகத் திரங்கானு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Khairi Khairudin, தெரிவித்தார்.
சுட்டுக்கொல்லப்பட்ட 33 வயது உள்ளூர் ஆடவரின் வாகனத்திலிருந்து சியாபு வகை போதைப்பொருளும் கைத்துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் கண்டெடுக்கப்பட்டதாகவும் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் ஆயுதக் கடத்தல் குற்றங்களுக்காத் தேடப்படும் குற்றவாளி அவரென என தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச் சூடு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடுவதாகத் திரங்கானு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Khairi Khairudin, தெரிவித்தார்.
Seorang lelaki berusia 33 tahun ditembak mati oleh polis di Kuala Besut selepas melepaskan tembakan ketika cuba ditahan. Suspek dikehendaki atas jenayah seperti penyeludupan dadah dan senjata. Polis menemui dadah, pistol dan peluru dalam kenderaannya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *