வசதியற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி- வெள்ளை விநாயகர் ஆலயம்!

- Muthu Kumar
- 18 Mar, 2025
(டிகே.மூர்த்தி)
தெலுக் இந்தான், மார்ச் 18-
இங்குள்ள அருள்மிகு வெள்ளை விநாயகர் ஆலயத்தின் 60 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் ஆலய மண்டபத்தில், தலைவர் டாக்டர் சித. சோமசுந்தரம் தலைமையில் சிறப்புடன் நடந்தேறியது.
ஆண்டுதோறும். ஆலய நிர்வாகத்தின் மூலம் இவ்வட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் வசதியற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த (2025) ஆண்டு திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி, சிதம்பரம்பிள்ளை தமிழ்ப்பள்ளி, பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் செல்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி என இந்த நான்கு தமிழ்ப்பள்ளிகளில் கல்வி கற்கும் வசதியற்ற மாணவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது.
இந்த நிதியை. அங்கு வருகை தந்துள்ள சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நால்வரும் ஆலயத் தலைவர் டாக்டர் சித.சோமசுந்தரத்திடம் இருந்து பெற்றுக் கொண்டனர். இந்த நிதி பெற்றோர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும்.
மேலும், பல ஆண்டுகளாக இந்த ஆலயத்தின் தலைமைப் பொறுப்பினை தன்னிடத்தில் வழங்கியுள்ள ஆலய நிர்வாகத்திற்கும். அதன் உறுப்பினர்களுக்கும் இந்து சமயத்தினருக்கும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரும். அமைச்சருமான ஙா கோர் மிங், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சுலிங்கம் மற்றும் பாசீர் பெர்டாமார் சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வூ காஹ் லியோங் ஆகியோருக்கும் கோவில் சார்பில் நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியினைத் தமது தலைமையுரையில் வெளிப்படுத்தினார்.
நடைபெற்ற வெள்ளை விநாயகர் ஆலய 60 ஆம் ஆண்டுக் கூட்டத்தில், ஆலயத்தின் புதிய தலைவராக பி.கிருஷ்ணமூர்த்தி போட்டியின்றித் தேர்வு பெற்றுள்ளார். துணைத் தலைவராக எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், செயலாளராக எம்.செல்வராஜும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் நிர்வாகத்தில், அகினிஷ், அரவிந்தன், குமர குருபரன். ராஜேந்திரன், இராஜகோபால், டாக்டர் சித.சோமசுந்தரம், லெங்கா மூர்த்தி, முருகன், கணேசன், எஸ்.கணேசன், மு.செலவராஜு, மாரியப்பன், பாலசுப்பிரமணியம், கே.கிருஷ்ணன், அண்ணாமலை, ஆர்.முனியாண்டி, பார்த்தசாரதி, காளிதாஸ் ஆகியோர் போட்டியின்றித்தேர்வாகியுள்ளனர்.
Mesyuarat tahunan ke-60 Kuil Arulmigu Vellai Vinayagar di Teluk Intan berlangsung di bawah kepimpinan Dr. Chith. Somasundaram. Bantuan kewangan diberikan kepada pelajar miskin dari empat sekolah Tamil. P. Krishnamurthy dipilih sebagai pengerusi baru bersama barisan kepimpinan baharu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *