பந்திங் சித்தி விநாயகர் ஆலயத் தலைவராக குருப்பண்ணன் மீண்டும் தேர்வு!

- Muthu Kumar
- 02 Apr, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
பந்திங், ஏப்.2-
பந்திங் நகரில் வீற்றிருக்கும் நூறாண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் தலைவராக குருப்பண்ணன் செல்லப்பன் மீண்டும் தேர்வு பெற்றார்.
நேற்று முன்தினம் ஞாயிறன்று காலையில் ஆலயக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற ஆலயத்தின் 27 ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தலைவராக தாம் தேர்வு செய்யப் பட்டதாக அவர் கூறினார்.
ஆலய நிர்வாகக் குழுவில் பாலச்சந்திரன் வீரமலை (துணைத் தலைவர்), மதிவாணன் பெரியசாமி (செயலாளர், இராஜேந்திரன் அய்யாக்கண்ணு துணைச் செயலாளர்), வெள்ளைச்சாமி குழந்தை (பொருளாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். அதே வேளையில், வேலு ராஜு, ராக்கியண்ணன் மாரியப்பன், ஹரிகிருஷ்ணன் முத்துசாமி, திருமதி தவராணி லெட்சுமணன். பாலகிருஷ்ணன் ரெங்கநாதன், சசிகுமார் பத்துமலை, இளையராஜா பழனிசாமி, செல்வம் ராமசாமி, கணேசன் மகேந்திரன் மற்றும் இராஜ மாணிக்கம் மாரிமுத்து ஆகியோர் ஆலய செயலவை உறுப்பினர்களாகத் தேர்வு பெற்றனர் என்று குருப்பண்ணன் கூறினார்.
ஆலய புதிய நிர்வாகத்தில் தேவேந்திரன் கந்தையா, நட்சிங்கம் அண்ணாமலை இருவரும் உட் கணக்காய்வாளர்களாக நியமிக்கப் பட்டதாக அவர் தெரிவித்தார். ஆலயத் தலைவராகத் தம்மை தெரிவு செய்த உறுப்பினர்களுக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக குருப்பண்ணன் கூறினார்.
Guruppanan Sellappan dipilih semula sebagai Pengerusi Kuil Sri Sithi Vinayagar di Banting dalam mesyuarat tahunan ke-27. Ahli jawatankuasa baharu termasuk Balachandran Veeramalai (Timbalan Pengerusi) dan Mathivanan Periasamy (Setiausaha). Devendran Kandaiah dan Natchingham Annamalai dilantik sebagai juruaudit dalaman.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *