புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து! - ஒருவர் மட்டும் ICU-வில்

top-news
FREE WEBSITE AD

சுபாங் ஜெயா, ஏப்ரல் 3: புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் ஒருவர் மட்டுமே சிலாங்கூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர் ம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிலாங்கூர் சுகாதார இயக்குனர் டாக்டர் உம்மி கால்தோம் ஷம்சுடின் தெரிவித்தார்.

சைபர்ஜெயா மருத்துவமனையில் இருந்து கோலாலம்பூர் மருத்துவமனைக்கு மூன்று நோயாளிகள் மாற்றப்பட்டுள்ளனர் என்றும் உம்மி கூறினார்.

முன்னர் இந்த வசதியில் இருந்த பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் அல்லது மாற்றப்பட்டுள்ளனர் என்று சைபர்ஜெயா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஷாஹாபுதீன் இப்ராஹிம் கூறினார்.

ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 8.10 மணிக்கு எரிவாய் குழாய் வெடித்தது. 500 மீட்டர் சுற்றளவில் பரவலான அழிவை ஏற்படுத்தியது. வீடுகள், வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்களை சேதப்படுத்தியது.

நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி, சுகாதார அமைச்சகம் 86 பேர் அமைச்சின் வசதிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் 46 பேர் தனியார் சுகாதார மையங்களில் இருப்பதாகவும் தெரிவித்தது.

வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள், தற்காலிக நிவாரண மையங்களில் இருக்கிறார்கள். அதே நேரத்தில் தீக்காயக் காயங்களுடன் பலர் தொடர்ந்து மருத்துவ சேவையைப் பெறுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

Subang Jaya, 3 April: Letupan paip gas di Putra Heights mengakibatkan 86 orang menerima rawatan di hospital, dengan seorang pesakit dirawat di unit rawatan rapi. Kejadian itu menyebabkan kerosakan pada rumah, kenderaan, dan harta benda. Lebih 100 penduduk kehilangan tempat tinggal dan ditempatkan di pusat pemindahan sementara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *