பட்டர் வொர்த் ரேஞ்சர்ஸ் அணிக்கு வெற்றிக் கோப்பை!

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

ஈப்போ, ஜன.13-

இங்குள்ள வசந்தன் கால்பந்து சங்கத்தின் முதலாம் ஆண்டாக தேசிய ரீதியில் உள்ள 23 வயதுக்கும் மேல்போகாத இளைஞர்களுக்கு இந்த ஒன்பதின்மருக்கான கால்பந்து போட்டி ஈப்போ பொத்தானி என்னும் இடத்தில் அமைந்துள்ள சீக் மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

நேற்று முன் தினம் 11.01.2025 இல் நடைபெற்றுள்ள ஒன்பதின்மர் போட்டியில் மொத்தம் 16 குழுக்கள் பங்கேற்றன.அதில் Butterworth rangers அணி முதலாம் இடத்திற்கு வந்து வெற்றிக் கோப்பையும் மற்றும் வெ.3,000 ரொக்கத்தையும் வென்றுது. இரண்டாம் இடத்தில், KSR TASEK குழு மாநிலங்களில் உள்ள நம் இளம் ஆட்டக்காரர்கள் யார் என அடையாளம் காணப்பட்டனர். ஆட்டக்காரர்கள் கோப்பையும், வெ.2,000 ரொக்கமும் பெற்றுச் சென்றனர். அடுத்து மூன்றாவது இடத்தை தனதாக்கிய IOPH FRIDAY குழு வெ 1,000 ரொக்கமும், நான்காவது இடத்தில் தாப்பா தமிழன் குழு வாகைசூடிய நிலையில் வெ.500
ரொக்கம் பரிசாகப் பெற்றுள்ளன.

வசந்தன் கால்பந்து சங்கத்தின் சார்பில் சஞ்சிவ் குமார் நாயுடு  கூறுகையில், முதல் முறையாக இப்போட்டி நடைபெற்றாலும், நாடு தழுவிய கால்பந்தாட்ட இந்திய இளைஞர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.மேலும், இந்த வசந்தன் கால்பந்து சங்கத்திற்கு கடந்த காலத்தில் 3 ஆண்டுகளாக வெட்டரன் கிண்ண கால்பந்து போட்டியை தலைமையேற்று நடத்திய அனுபவத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் விவரித்தார்.

விளையாட்டு துறையில் நாம் எங்கே இருந்துள்ளோம். இப்போது எங்கே இருக்கின்றோம்.எதிர்காலத்தில் எங்கே இருக்க வேண்டும் என்ற தூரநோக்கு விழிப்புணர்வு என்பதை இந்த போட்டியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *