தளவாடப் பொருள்களுடன் தீயில் கருகிய வாகனம்!

- Sangeetha K Loganathan
- 06 Apr, 2025
ஏப்ரல் 6,
இன்று அதிகாலை ஏற்பட்ட தீயில் தளவாடப் பொருள்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் தீயில் கருகியது. அதிகாலை 2.23 மணிக்குத் தீ விபத்துக்கு குறித்து அவசர அழைப்பைப் பெற்றதும் சரவாக் தீயணைப்பு ஆணையத்திலிருந்து 8 தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் நள்ளிரவு 3.20 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபூவில் உள்ள Lanang பகுதியில் தளவாடப் பொருள்களுடன் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், வாகனத்திலிருந்த தளவாடப் பொருள்கள் முழுமையாகத் தீயில் கருகியதாகவும் வாகனம் 80% தீயில் கருகியதாகவும் வாகனம் நிறுத்துமிடத்தின் அருகிலுள்ள பாதுகாவலர் குடில் 30% தீயில் கருகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைத் தடயவியல் நிபுணர்கள் சோதனையிட்டு வருதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sebuah van yang dipenuhi barangan perabot musnah dalam kebakaran awal pagi tadi di Lanang, Sibu. Kebakaran turut memusnahkan 80% van dan 30% pondok pengawal berdekatan. Punca kejadian masih dalam siasatan pihak forensik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *