ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் போட்டியில் ஸ்வரேவ் அரையிறுதிக்கு தகுதி!

top-news
FREE WEBSITE AD

ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி நாளை மறுதினம் வரை நடக்கிறது.

இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொனடனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது லீக் போட்டியில் நம்பர் 2 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நம்பர் 3 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.இதில் ஸ்வரேவ் 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதுகிறார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *