ஜசெகவின் மூலமாக இந்தியர்களின் தேவைகளை நிறைவேற்றுவேன் -அருள்குமார்!

top-news
FREE WEBSITE AD

(நாகேந்திரன் வேலாயுதம்)

சிரம்பான், மார்ச் 18-

ஜனநாயக செயல் கட்சி தேர்தலில் போட்டியிட்ட நெகிரி செம்பிலான் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினரும், நீலாய் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஜசெக உதவித் தலைவருமான அருள்குமார் ஜம்புநாதன் வெற்றி பெற்றார். அவரின் அந்த வெற்றியை தொடர்ந்து அவர், கட்சியின் தேசிய உதவித் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

அவரின் அந்த வெற்றி மற்றும் கட்சியில் உயர்மட்ட பதவி நியமனம் குறித்து கூறிய அருள்குமார், தமக்கு வாக்களித்து, தொடர்ந்து சேவையாற்ற வாய்ப்பளித்த கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

முதல் முறையாக மத்திய செயலவைக்குப் போட்டியிட்டு வெற்றி பெறுவது தனக்கு பெரும் மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது.எனக்குத் துணை நிற்கும் கட்சியின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக், கட்சித் தலைவர் கோபிந்த் சிங் டியோ ஆகியோருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.

தேசிய உதவித் தலைவர் என்ற அளவிலான இந்த புதிய பொறுப்பு, இதுநாள் வரையில் தமது சேவைக்கு சவால்விடும் ஒரு பொறுப்பு என குறிப்பிட்டார்.இந்தியர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்க, மேலும் அதிகமான இந்தியர்களைஜசெகவில் இணைக்கப் பாடுபடுவேன்.

மேலும் அதிகமான இந்தியர்கள் கட்சியில் இணைந்தால்தான், அரசியலில் இந்தியர்களின் குரல் ஆழமாக ஒலிக்க முடியும். அதோடு கட்சியில் அதிகமான இந்திய பேராளர்கள் உருவாக வேண்டும் என்றும். அதற்கு நான் கடுமையாக உழைப்பேன், என்றும் உறுதியாகக் கூறினார்.

அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் ஜசெக, இந்திய சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த பங்காற்ற வேண்டும். இந்த விவகாரத்தை தலைமைத்துவத்திடம் எடுத்துச் சென்று, உரிய நடவடிக்கை முன்னெடுக்கவிருப்பதாகவும் அருள்குமார் உறுதியளித்தார்.

Arul Kumar Jambunathan, Ahli Dewan Undangan Negeri Nilai dan Timbalan Pengerusi DAP Negeri Sembilan, memenangi pemilihan parti dan dilantik sebagai Timbalan Pengerusi Kebangsaan DAP. Beliau berjanji memperjuangkan suara masyarakat India dalam politik dan meningkatkan taraf pendidikan serta ekonomi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *