என் இதயம், ஆன்மா எல்லாமே விஜய் தான்- அட்லி!

- Muthu Kumar
- 12 Dec, 2024
என் இதயம், ஆன்மா எல்லாமே 'அவர்தான்' என இயக்குனர் அட்லி நெகிழ்ந்துள்ளார்.தமிழ் சினிமாவில் வென்று, இந்தி திரையுலகில் கலக்கி வருகிறார் இயக்குனர் அட்லி. சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானதை தொடர்ந்து, தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தை தயாரித்தும் வருகிறார்.
'பேபி ஜான்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலிஸ் என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில், வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.
வரும் 25-ம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வருண் தவான், வாமிகா கபி, அட்லீ உள்ளிட்டோ கலந்துகொண்டனர். அப்போது பேசிய அட்லீ, ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் விஜய்க்கு நன்றி கூறினார். இது குறித்து அட்லி கூறும் பொழுது ஷாருக்கான் சார் இல்லாமல் என்னால் பாலிவுட்டில் நுழைந்து ஒரு படத்தை இயக்கி தற்போது ஒரு படத்தை தயாரித்திருக்க முடியாது. அதற்காக அவருக்கு நன்றி. நீங்கள் எங்கிருந்தாலும், எங்களை ஆசிர்வதிக்க வேண்டும்.
எனது இரண்டாவது நன்றி சகோதரர் தளபதி விஜய்க்கு. என் இதயம், ஆன்மா மற்றும் எல்லாமே அவர்தான். நான் அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். சல்மான்கானுக்கு ஸ்பெஷல் நன்றி' என நெகிழ்ந்திருக்கிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *