வெ.40 லட்சம் வெட்டுமரங்கள், அலங்காரச் செடிகள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

ரந்தாவ் பாஞ்சாங்,மார்ச் 31-

கிளந்தானில் பொது நடவடிக்கைகள் படைப் பிரிவின் வீரர்கள் அண்மையில் மேற்கொண்ட இரண்டு சோதனை நடவடிக்கைளில் நாற்பது லட்சம் வெள்ளி மதிப்புள்ள வெட்டுமரங்களும் அலங்காரச் செடிகளும் கைப்பற்றப்பட்டன.

அவ்விரு சோதனை நடவடிக்கைகளும் ரந்தாவ் பாஞ்சாங்கில் மேற்கொள்ளப்பட்டன. கம்போங் புக்கிட் தண்டாக்கில் வெட்டுமர ஆலையொன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 525 வெட்டுமரங்களும் 36,000 பலகை மற்றும் மரச்சட்டங்களும் கைப்பற்றப்பட்டன. மரம் சீவும் பல இயந்திரங்களும் அங்கு காணப்பட்டன.

அவற்றின் மொத்த மதிப்பு இருபத்து நான்கு லட்சத்து நாற்பதாயிரம் வெள்ளியாகும் என்று படைப் பிரிவின் தென்மண்டல அதிகாரி நிக் ரோஸ் அஸான் நிக் அப்துல் ஹமீட் தெரிவித்தார்.மற்றொரு சம்பவத்தில், லோரியொன்றைத் தடுத்து நிறுத்திய அமலாக்க அதிகாரிகள், அதிலிருந்த ஒன்பது பெரிய போன்சாய் மரங்களைக் கைப்பற்றினர். அவை பூச்சிகளால் தாக்கப்பட்டிருந்தன. அவற்றின் மதிப்பு பதினைந்து லட்சத்து ஐம்பதாயிரம் வெள்ளியாகும் என்றார்.அவ்விரு சம்பவங்களிலும் தலா ஒருவர் கைதுசெய்யப்பட்டனர்.

Pihak berkuasa merampas kayu balak dan pokok hiasan bernilai RM4 juta dalam dua serbuan di Rantau Panjang, Kelantan. Operasi itu menemukan 525 batang kayu balak dan 9 pokok bonsai bernilai tinggi. Dua individu ditahan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *