பாரீஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டி நடைபெற இருக்கும் நதியில் மோசமான கிருமிகள்!
- Muthu Kumar
- 09 Jul, 2024
வரும் ஜூலை-26ம் தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் தொங்கவிருக்கிறது. இந்நிலையில், துவக்க நிகழ்ச்சிகளும், நீச்சல் போட்டிகளும் நடைபெற உள்ள நதியில் திடீரென மோசமான கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் துவங்கும் பொழுது எப்போதும் துவக்க நிகழ்ச்சிகளை தொடங்கியே ஆரம்பிக்கப்படும். அந்த நிகழ்ச்சியில் ஒரு சில நிகழ்வுகள் பாரிஸில் அமைந்துள்ள சீன் நதியில் நடைபெற இருந்தது.
மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெறும் நீச்சல் போட்டிகளும் அதே சீன் நதியில் தான் நடைபெற இருந்தது. இந்நிலையில், ஈ. கொலி (E.Coli) மற்றும் என்டோரோகோகி (Enterococci) என்னும் மோசமான கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நதி நீரில் மனிதக்கழிவுகள் கலந்திருந்தால் மட்டுமே இது போன்ற கிருமிகள் இருக்கும் என்று கூறுகின்றனர்.இதை நாம் கண்டுகொள்ளாமல், இந்த நிலை நீடித்தால் நதியில் நீச்சல் போட்டிகள் நடத்துவது சரியானதாக இருக்காது.
மேலும், நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளும் இளம் வயதினருக்கு போதுமான அளவில் நோய் எதிர்ப்பு சக்திகள் இருந்தாலும் சில நேரங்களில் அவர்கள் நீந்தும் போது இந்த நீரை அவர்கள் உட்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக சில நேரங்களில் சிலருக்கு நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதே நேரம் மழை வேறு பெய்து வருவதால், நதியில் நீர் அதிகரிக்கும் பட்சத்தில் கிருமிகள் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இதற்காக முடிந்த அளவுக்கு சீன் நதியில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வருகிறோம் ஒரு வேலை கிருமிகள் அதிகரிப்பதால் ஒலிம்பிக் போட்டிகளை இங்கு நடத்த முடியாமல் போனால், அதற்கு மாற்றாக பிளான்- B யாக வைரேஸ் சுர் மார்னே நாட்டிகல் ( Vaires-sur-Marne Nautical) மைதானத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்று ஒலிம்பிக் போட்டியை நடத்தவிருக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *