புதன் : 9 ஏப்ரல், 2025
03 : 19 : 59 AM
முக்கிய செய்தி

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய கருணை விடுப்பு! - முதலாளிகள் சங்கம் ஆதரவு

top-news
FREE WEBSITE AD

 கோலாலம்பூர், ஏப்ரல் 5: அண்மைய எரிவாயு குழாய் வெடிப்பு அப்பகுதி மக்களைப் பெரும் சேதத்திற்குள்ளாக்கியிருக்கும் நிலையில், குறைந்தது 190 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

148 கார்கள் மற்றும் 11 மோட்டார் சைக்கிள்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 112 பேர் காயமடைந்த நிலையில், 63 பேர் தீக்காயங்கள், சுவாசப் பிரச்சினைகள் மற்றும் பிற காயங்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. 49 பேர் ஆரம்ப சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில், இந்த நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பான MEF, முதலாளிமார்கள் தங்களின் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய கருணை விடுப்பு வழங்க வேண்டும் என்றும் மற்றும் பேரழிவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தோதான பணி ஏற்பாடுகளை பரிசீலிக்க வேண்டும் என்ற மனிதவள அமைச்சகத்தின் அழைப்புக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளது

இந்த கடினமான நேரத்தில் ஊழியர்களை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை  MEF தலைவர் டத்தோ டாக்டர் சையத் ஹுசைன் சையத் ஹுஸ்மான் நேற்று ஒரு அறிக்கையில் வலியுறுத்தினார்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சையத் ஹுசைன் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

பாதிக்கப்பட்ட பல ஊழியர்கள் தனிப்பட்ட இழப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் அவர்களின் குடும்பங்களின் நல்வாழ்வு காரணமாக துயரத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதை MEF அங்கீகரிக்கிறது.

வணிக தொடர்ச்சியை உறுதி செய்யும் அதே வேளையில், தங்கள் ஊழியர்களை ஆதரிக்கும் கருணைக் கொள்கைகளை வணிக நிறுவனங்கள் பின்பற்றுவது மிக முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக நெருக்கடிகளின் போது ஆதரவான பணிச்சூழலை வளர்ப்பதில் முதலாளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஊதியத்துடன் கூடிய கருணை விடுப்பு வழங்குவதும் நெகிழ்வான பணி ஏற்பாடுகளைக் கருத்தில் கொள்வதும் மனிதாபிமானமானது மட்டுமல்ல, நீண்ட காலத்திற்கு ஊழியர்களின் மன உறுதி, நல்வாழ்வு மற்றும் உற்பத்தித்திறனுக்கும் பங்களிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தங்கள் ஊழியர்களை ஆதரிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ள தனியார் துறை முதலாளிகளைப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்!

MEF menyokong seruan Kementerian Sumber Manusia agar majikan memberi cuti ihsan bergaji dan fleksibiliti kerja kepada pekerja yang terkesan akibat letupan paip gas di Kuala Lumpur. Sekurang-kurangnya 190 rumah rosak, 112 cedera dan 63 dimasukkan ke hospital. MEF tekankan kepentingan sokongan majikan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *