மலேசியாவை வெற்றி பெறச் செய்வதுதான் மிக முக்கியமானது-டத்தோ ரஷித் சிடெக்!

- Muthu Kumar
- 26 Dec, 2024
கோலாலம்பூர்: ஜனவரி 7 முதல் -12 தேதிகளில் புக்கிட் ஜாலிலில் நடைபெறும் மலேசிய ஓபன் தொடர் நாட்டின் பல தேசிய ஷட்லர்களை உருவாக்கும் என பேட்மிண்டன் ஜாம்பவான் டத்தோ ரஷித் சிடெக் வலியுறுத்தியுள்ளார்.
மலேசிய ஓபன் தொடரில் நாட்டின் கடைசி வெற்றியாக 2018 இல் உலகின் முன்னாள் நம்பர் 1 வீரரான டத்தோ லீ சோங் வெய் தனது 12வது ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்."இந்த முறை நாம் ஒரு சாம்பியனை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன், அது ஒற்றையர் அல்லது இரட்டையர் போட்டிகளில் எதுவாக இருந்தாலும் சரி. மிக முக்கியமானது மலேசியாவை வெற்றி பெறச் செய்வதுதான்" என்று ரஷித் இன்று கூறினார்.
தொழில்முறை வீரர்களான ஆண்கள் ஒற்றையர் நட்சத்திரம் லீ ஜி ஜியா, ஆண்கள் இரட்டையர் ஆரோன் சியா-சோ வூய் யிக் மற்றும் நூர் இசுதின் ரும்சானி-கோ ஸ்ஸீ ஃபீ மற்றும் கலப்பு இரட்டையர் சென் டாங் ஜியே-தோ ஈ வெய் உட்பட பல போட்டியாளர்களை ரஷித் குறிப்பிட்டார்.
Izzuddin-Sze Fei மற்றும் Tang Jie-Ee Wei ஆகியோர் சமீபத்தில் சீனாவின் ஹாங்சோவில் நடந்த BWF வேர்ல்ட் டூர் பைனல்ஸில் (WTF) இரண்டாம் இடத்தைப் பிடித்தனர் என்றும் பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் இரண்டாவது வெண்கலப் பதக்கம் வென்ற உலகின் 6ம் நிலை வீரரான ஆரோன்-வூய் யிக், நவம்பரில் கொரியா மாஸ்டர்ஸ் பட்டத்தையும் வென்றார் என்றும் நினைவு கூர்ந்தார்.
உலகின் நம்பர் 3 Izzuddin-Sze Fei க்கு 2024 ஒரு சிறப்பான ஆண்டு, மூன்று உலக டூர் பட்டங்களை வென்றார் - ஜப்பான் ஓபன், சீனா ஓபன் மற்றும் ஆர்க்டிக் ஓபன்."ஜி ஜியாவைப் பொறுத்தவரை, அவர் WTFல் ஏற்பட்ட கணுக்கால் காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடைந்துவிட்டாரா என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் போட்டியிடத் தகுதியுடையவராக இருந்தால், அவர் கண்டிப்பாக சாம்பியன் பட்டத்துக்குச் சவால் விடக்கூடிய திறன் கொண்டவர்.ஹாங்சோவில் இருந்து விலகுவதற்கு முன், அவர் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆரோன்-வூய் யிக்கைப் பொறுத்தவரை, இந்த ஹோம் போட்டியானது உலக சாம்பியனாகி இரண்டு ஒலிம்பிக் வெண்கலப் பதக்கங்களை வென்ற பிறகு மற்றொரு மைல்கல்லை அடைய ஒரு தளமாக இருக்கும்."2025 ஆண்டின் மலேசியா ஓபந்தொடரின் மொத்தப் பரிசுத் தொகையாக 1.45 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (RM6.48 மில்லியன்) வழங்கப்படும்.
ஒற்றையர் சாம்பியன் 101,500 அமெரிக்க டாலர்கள் (RM453,628), இரட்டையர் சாம்பியன்கள் 107,300 அமெரிக்க டாலர்கள் (RM479,598) பெறுவார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *