பெண் வாகனமோட்டியைக் கொடூரமாகத் தாக்கிய ராணுவ வீரர் கைது!

- Sangeetha K Loganathan
- 31 Mar, 2025
மார்ச் 30,
பெண் வாகனமோட்டியை ஆடவர் ஒருவர் தாக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தலங்களில் பரவியதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட ஆடவரைக் கைது செய்துள்ளதாகச் சிரம்பான் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 10.15 மணிக்கு Senawang சாலையில் நிகழ்ந்ததாகவும் தாக்குதலுக்குள்ளானப் 28 வயது இளம்பெண் வாகனமோட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தாக்குதல் நடத்திய ஆடவரைக் கைது செய்ததாகவும் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார்.
சாலையைக் கடக்கும் போது வாகனம் வருவதைப் பார்க்காமல் 34 வயது பெண்ணும் அவரின் 7 வயது மகளும் சாலையைக் கடந்ததாகவும், எதிர்பாராத நேரத்தில் சாலையைக் கடக்கும் போது எதிரில் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும் 7 வயது மகளும் சிராய்ப்புக் காயங்குள்ளான நிலையில் 7 வயது சிறுமியின் தந்தை வாகனத்தைச் செலுத்திய 28 வயது இளம்பெண்ணைச் சரமாரியாகத் தாக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தாக்குதல் நடத்திய ஆடவர் இராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
Seorang anggota tentera ditahan selepas menyerang seorang pemandu wanita berusia 28 tahun di Senawang. Insiden itu berlaku apabila isteri dan anaknya melintas jalan tanpa menyedari kehadiran kenderaan, menyebabkan mereka cedera ringan akibat pelanggaran
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *