அரண்மனையில் ஹரி ராயா விருந்து!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 31: மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் ராணி ராஜா ஜரித் சோபியா ஆகியோர் இன்று இஸ்தானா நெகாராவில் ஹரி ராயா ஐடில்பித்ரி நிகழ்வை நடத்தினர்.

 இந்நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், மற்ற கேபினட் அமைச்சர்கள் மற்றும் அரசு மற்றும் ஏஜென்சி உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார்,  சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் மற்றும் மலேசிய தேசிய செய்தி நிறுவனத்தின் (பெர்னாமா) தலைவர் டத்தோஸ்ரீ வோங் சுன் வை உட்பட 300 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இங்கிலாந்து, துருக்கி, எகிப்து, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தூதர்கள் உட்பட வெளிநாட்டு பிரமுகர்களும் கலந்து கொண்டனர்!

Yang di-Pertuan Agong Sultan Ibrahim dan Raja Zarith Sofiah mengadakan sambutan Hari Raya Aidilfitri di Istana Negara. Acara ini dihadiri oleh Perdana Menteri Anwar Ibrahim, menteri kabinet, pegawai tinggi kerajaan, serta lebih 300 tetamu termasuk duta asing dari pelbagai negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *