மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 ஆக பதிவு!

- Muthu Kumar
- 31 Mar, 2025
மண்டலே, மார்ச் 31-
மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, ரிக்டர் அளவைக் கருவியில் 5.1ஆக பதிவான மூன்றாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.வெள்ளிக்கிழமை பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான
நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மண்டலேயின் தெருக்களில் மக்கள் பீதியில் அங்கும் இங்கும் ஓடி பாதுகாப்பான இடங்களைத் தேடினர்.கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் மியன்மாரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.மேலும் பல உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு 6.7 என்ற அளவில் இரண்டாவது பூகம்பம் ஏற்பட்டிருந்தது.
இதுவரை மியன்மாரில் பலியாகி இருப்போரின் எண்ணிக்கை 2,000த்தை எட்டியிருப்பதாகவும். 3,400 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதால், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் பதினேழு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மண்டலே நகர்ப் பகுதியில் பேரழிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Gempa bumi berukuran 5.1 magnitud melanda Mandalay, Myanmar, semalam, susulan gempa besar 7.7 magnitud pada Jumaat lalu. Jumlah korban meningkat kepada 2,000 dengan lebih 3,400 masih hilang. Penduduk panik dan usaha mencari serta menyelamat terus dipergiatkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *