சிவசங்கரிக்கு டத்தோ அலெக்ஸ் லீ விருது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 18: ஆசிய ஸ்குவாஷ் சம்மேளனத்தின் (ஏஎஸ்எஃப்) சிறந்த பெண் வீரருக்கான டத்தோ அலெக்ஸ் லீ விருது எஸ்.சிவசங்கரிக்கு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு Hangzhou ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான தனிநபர் மற்றும் குழுப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றதற்காக அவர் கௌரவிக்கப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனாவின் டேலியன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹாங்காங்கை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆசிய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை மலேசியா வெல்வதற்கு உதவியதன் மூலம் உலகின் நம்பர் 10 ஆவது வீராங்கனையான சிவசங்கரி சீசனை வெற்றிகரமாக முடித்தார். 

இதன் மூலம்25 வயதான அவர் உலக ஸ்குவாஷ் சம்மேளனத்தின் தலைவர் ஜீனா வூல்ட்ரிட்ஜிடம் இருந்து டத்தோ அலெக்ஸ் லீ விருதை டேலியனில் பெற்றார்.

சிவசங்கரி மற்றும் அவரது தேசிய அணியினர், ரேச்சல் மற்றும் அஸ்மான் சகோதரிகள், ஐஃபா மற்றும் ஐரா, ஆசிய விளையாட்டு அணி தங்கத்தை கைப்பற்றியதற்காக ASF மகளிர் அணி விருதையும் வென்றனர்.

டத்தோ அலெக்ஸ் லீ விருதை சிவசங்கரி வெல்வது இதுவே முதல் முறை என்று மலேசிய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் சங்கத்தின் இயக்குநர் மேஜர் எஸ். மணியம் தெரிவித்தார்.

இந்த விருது சிவசங்கரியை இந்த ஆண்டு போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், சிவசங்கரி புரொபஷனல் ஸ்குவாஷ் அசோசியேஷன் (PSA)  பருவத்தின் மகளிர் போட்டி விருதுகளையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]