2034 ஆம் ஆண்டு பிபா கால்பந்து தொடரை சவுதி அரேபியா நடத்தும்!

top-news
FREE WEBSITE AD

2030 மற்றும் 2034 ஆம் ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை தொடரை எந்த நாடு நடத்தும் என்பதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.உலகில் அதிக மக்களால் பார்க்கப்படும் தொடரில் உலகக் கோப்பை முதன்மை இடத்தில் இருக்கிறது.

இந்த உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். 2022 FIFA உலகக் கோப்பை தொடரை கத்தார் வெற்றிகரமாக நடத்திய நிலையில் 2026 ஆம் ஆண்டு பிபா உலகக்கோப்பை அமெரிக்கா கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகிறது.

இந்த சூழலில் 2030 மற்றும் 34 ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தொடரை யார் நடத்துவது என்பதை சுவிட்சர்லாந்தில் உள்ள ஸூரிச் நகரில் அறிவித்தார். அதன்படி 2030 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரை ஆறு நாடுகள் இணைந்து நடத்தும் என்று அவர் அறிவித்தார்.அதன்படி ஸ்பெயின், போர்ச்சுகல், மொராகோ, அர்ஜென்டினா, பராகுவே, உருகுவே ஆகிய நாடுகள் இணைந்து இந்த தொடரை நடத்தும் என்று அவர் அறிவித்தார்.

1930 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை உருகுவேயில் நடைபெற்றதை நூறாண்டுகள் கொண்டாட்டமாக இந்த உலகக் கோப்பை நடைபெறும் என்று அவர் அறிவித்தார். இதனை அடுத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 2034 ஆம் ஆண்டு பிபா கால்பந்து தொடரை சவுதி அரேபியா நடத்தும் என்று தலைவர் ஜியானி இன்பானிட்டோ அறிவித்தார். இது சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியா தற்போது கால்பந்து போட்டிகளுக்காக பல கோடி ரூபாயை முதலீடு செய்து நடத்தி வருகிறது. ஏற்கனவே ரொனால்டோ, நெய்மார் போன்ற வீரர்கள் சவுதி அரேபியாவில் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் உலகக் கோப்பை அங்கு நடைபெற போவது மிகப்பெரிய திருப்புமுனையை சவுதி அரேபியாவுக்கு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கால்பந்து உலகக் கோப்பை தொடருக்காக 15 மைதானங்கள் அமைக்க சவுதி அரசு முடிவு எடுத்திருக்கிறது. இதில் குறிப்பாக ரியாத் நகரில் உள்ள மலை தொடரில் 200 மீட்டர் உயரத்தில் ஒரு மைதானத்தை அமைக்க சவுதி முடிவு எடுத்து இருக்கிறது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாயை சவுதி அரசு முதலீடு செய்துள்ளது. இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள சவுதி அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துல் அசிஸ், இது மூன்று கோடி சவுதி மக்களின் கனவு தற்போது நிறைவேறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *