பரதன் கிண்ண கால்பந்து போட்டி பெர்லிஸ் 3-0 கோல் கணக்கில் பினாங்கை வீழ்த்தியது!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.ரமணி)

ஜோர்ஜ்டவுன், டிச. 8-

2024 ஆம் ஆண்டுக்கான பரதன் கிண்ண கால்பந்து போட்டி நேற்றைய முன்தினம் பினாங்கு சிட்டி அரங்கில் கோலாகலமாகத் தொடங்கியது.பினாங்கு மற்றும் பெர்லிஸ் கால்பந்து குழுக்களுக்கு இடையிலான கால்பந்து ஆட்டம் தொடங்கிய முதல் 45 நிமிடத்தில் இரு குழுக்களும் கோல் அடிக்க பல தாக்குதல்களை நடத்தினர்.

பெர்லிஸ் இந்திய கால்பந்து அணி பல அபாயகர தாக்குதல்களை நடத்தி முதல் 45 நிமிட ஆட்டத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.இதனிடையே 15வது நிமிடத்தில் பெர்லிஸ் இந்திய கால்பந்து அணியின் தினுசீன் பிள்ளை ரவிந்தரன் முதல் கோலை அடித்து பெர்லிஸ் இந்திய கால்பந்து அணியை முன்னணியில் வைத்தார்.இதனிடையே பினாங்கு இந்திய கால்பந்து அணியினர் பல தாக்குதலை பெர்லிஸ் இந்திய கால்பந்து அணிக்கு எதிராக நடத்தியதுடன் பல வாய்ப்புகள் கோல் அடிக்க சாதகமாக இருந்ததுடன் அதனைச் சரிவரப் பயன்படுத்த முடியாமல் போனது பினாங்கு கால்பந்து அணி.

இதனிடையே இரண்டாம் பாதி தொடங்கியதுடன் 67 ஆவது நிமிடத்தில் தாமோதரன் ஜெயசங்கர் நடத்திய தாக்குதலில் இரண்டாவது கோலை அடித்து பெர்லிஸ் இந்திய கால்பந்து அணியின் வெற்றிக்கு மேலும் சாதகமாக்கினார்.

இதனுடன் இரண்டாம் பாதி ஆட்டத்தின் 85 ஆவது நிமிட ஆட்டத்தில் பினாங்கு இந்திய கால்பந்து அணியின் முகமட் ஆசிக் டேனியால் பெர்லிஸ் கால்பந்து ஆட்டக்காரர் நடத்திய தாக்குதலைத் தடுக்கும் முயற்சியில் தலையில் முட்டி பந்தை வெளியேற்ற முயன்ற போது அப்பந்து தனது சொந்த கோலாக்கியதால் இந்த பரதன் கிண்ண கால்பந்து முதல் தொடக்க ஆட்டத்தில் 3-0 எனும் கோல் எண்ணிக்கையில் பெர்லிஸ் இந்திய கால்பந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பெர்லிஸ் கால்பந்து ஆட்டக்காரர்களுக்கு போதிய பயற்சிகள் வழங்கப்பட்டு மேலும் தொடர்ந்து கால்பந்து ஆட்டங்களில் வெற்றி பெற போதிய முயற்சிகளை தொடரப்போவதாக அதன் நிர்வாகி விவேந்திரன் பரமேஸ்வரா தெரிவித்தார்.இவ்வாண்டு பரதன் கிண்ணத்தை வெல்வதே பெர்லிஸ் கால்பந்து அணியின் லட்சியமென அவர் சூளுரைத்தார்.




இதனுடன் பெர்லிஸ் கால்பந்து அணிக்கு உதவிய நிறுவனங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.பெர்லிஸ் கால்பந்து அணியின் தலைமை பயிற்றுநர் மகேந்திரன் கந்தையா அவர்களின் தலைமையில் பெர்லிஸ் இந்திய கால்பந்து அணியினர் களம் இறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *