பெட்டாலிங் உத்தாமா மாவட்ட கிரிக்கெட் போட்டி-பிஜேஎஸ்1 தமிழ்ப்பள்ளி வாகை சூடியது!

- Muthu Kumar
- 20 Dec, 2024
பெட்டாலிங் ஜெயா, டிச.20-
லா சாலே தேசிய பள்ளியில் 11 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான காட்மோ கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் பெட்டாலிங் உத்தாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஆரம்பப்பள்ளிகள் கலந்து கொண்டன.
பள்ளிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிய நிலையில் பிஜேஎஸ்1 தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐந்தில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றதோடு மொத்தம் 299 ஓட்டங்களை எடுத்து முதலிடம் வென்று சாதனை புரிந்தனர்.
இரண்டாம் இடத்தை சீப்போர்ட் தமிழ்ப்பள்ளி வென்ற நிலையில், மூன்றாம் இடத்தை ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளி மற்றும் லா சாலே தேசியப்பள்ளி தட்டிச் சென்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெட்டாலிங் மாவட்ட புறப்பாட நடவடிக்கைப் பிரிவின் உதவி மாவட்ட கல்வி அதிகாரி, லா சாலே தேசியப்பள்ளி மற்றும் ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர்கள் பரிசுகளை எடுத்து வழங்கினர்.
இப்பரிசளிப்பு விழாவில் மாணவர்கள் மட்டுமல்லாது, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர். பிஜேஎஸ் 1 தமிழ்ப்பள்ளி புதிய பள்ளியாக இருப்பினும் விளையாட்டுத் துறையில் இதுபோன்ற சிறந்த அடைவுநிலைகளைப் பதிவு செய்து பீடுநடை போடுவது பெருமைப்படக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது என பள்ளித் தலைமையாசிரியர் திருமதி இராஜலெட்சுமி இராஜரத்னம் கூறினார்.
மேலும் அவர் மாணவர்களுக்கும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *