இந்தப் பெருநாளை ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்!

- Muthu Kumar
- 31 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 31-
நாட்டில் சகோதரத்துவமும் சமத்துவமும் நல்லிணக்கமும் நீடித்து நிலைத்து நிற்க அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும். இன்று கொண்டாடப்படும் நோன்புப் பெருநாள் அனைவருக்கும் சுபிட்சமிக்க நாளாக அமைய வேண்டும் என ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஒரு மாதம் நோன்பிருந்து தங்களது புனிதக் கடமையை நிறைவேற்றி இன்று நமது முஸ்லிம் அன்பர்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். அவர்களின் கொண்டாட்டத்தில் நாமும் பங்கெடுத்து வாழ்த்து கூறுவோம். மலேசியாவில் முஸ்லிம் அன்பர்களின் நோன்புப் பெருநாள் ஒரு தனித்துவமிக்கதாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைவரையும் மதிக்கும் தன்மையும் நட்பு பாராட்டும் சகோதரத்துவமும் என்றும் நிலைபெற வேண்டும்.
ஒருவருக்கொருவர் சமய சகிப்புத்தன்மையுடன் நடந்துகொண்டு நட்புக்கரம் நீட்ட வேண்டும். அதுமட்டுமல்லாது எத்தனை கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் அமர்ந்து பேசக்கூடிய பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் பெருநாளை அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடப்படும் பெருநாளாக, ஏழை எளியோரையும் மதிக்கும் பெருநாளாக கொண்டாடுவோம் என்று ஓம்ஸ் தியாகராஜன் தெரிவித்தார்.
Ketua OMS, P. Thiagarajan, mengucapkan Selamat Hari Raya dan menekankan kepentingan perpaduan, persaudaraan, serta toleransi agama di Malaysia. Beliau menyeru agar rakyat menghormati satu sama lain, berbincang secara harmoni, dan meraikan perayaan dengan nilai kasih sayang serta keprihatinan terhadap golongan kurang berkemampuan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *