அதிகாரிகள் என்னை மூன்று முறை எச்சரிக்கவில்லை-பலூன் வியாபாரி விளக்கம்!

- Muthu Kumar
- 31 Mar, 2025
கோலாலம்பூர்,மார்ச் 31-
வெள்ளிக்கிழமை இரவு தங்களுக்கிடையே கைகலப்பு நடப்பதற்கு முன்பு கோலாலம்பூர் மாநகர் மன்ற (டிபிகேஎல்) அதிகாரிகள் தமக்கு மூன்று முறை எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுவதை பலூன் வியாபாரி ஒருவர் மறுத்துள்ளார்.
அமலாக்க அதிகாரிகள் தாக்கியதில் தமது முதுகுத் தண்டுவடம் முறிந்து விட்டது என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள (வயது 28) நேற்று கூறிக்கொண்டார். லைசென்ஸ் பெறாமல் வியாபாரம் செய்ததால் தாக்கப்பட்டேன் என்பதையும் ஜைமுடின் ஒப்புக் கொண்டார்.
மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபடி
பேசிய அவர், அமலாக்க அதிகாரிகள் என்னை மூன்று முறை எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுவது தவறு. அவர்களைப் பார்த்து நான் பயந்ததுதான் உண்மை.
விண்ணப்பம் செய்வதற்கான விதிமுறைகள் தெரியாததால் லைசென்ஸுக்கு நான் விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர் கூறிக்கொண்டார். தாம் ஒரு மலேசியர் அல்ல
என்று கூறப்படுவதை மறுத்த அவர், தம்மை
பகாங், ஜெராந்துட் நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறிக்கொண்டார். ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிடான் காசிமின் அதிகாரி
ஒருவர் பகிர்ந்து கொண்ட காணொளியில்
ஜைமுடின் இதனைத் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு கோலாலம்பூர், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் நிகழ்ந்த அந்த மோதலில் எனது முதுகுத் தண்டு உடைந்து விட்டது. எனக்கு வியாபாரம் மட்டுமே செய்யத் தெரியும் என்பதால் லைசென்ஸ் எடுப்பதற்கு ஷாஹிடான்தான் உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Seorang peniaga belon menafikan dakwaan pihak berkuasa DBKL telah memberi tiga amaran sebelum pergelutan berlaku di Jalan Tuanku Abdul Rahman. Dia mendakwa mengalami kecederaan tulang belakang akibat insiden itu dan meminta bantuan mendapatkan lesen perniagaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *