யூரோ கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை!
- Muthu Kumar
- 01 Jul, 2024
யூரோ கோப்பை தொடரின் நாக் அவுட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் வலிமை வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்த்து ஸ்லோவாக்கியா அணி விளையாடியது. இதற்கு முன்பாக நடந்த 2016 மற்றும் 2020 யூரோ கோப்பை தொடர்களில் இங்கிலாந்து அணி நாக் அவுட் சுற்றில் ஐஸ்லாந்து மற்றும் ஜெர்மனி அணிகளிடம் தோல்வியடைந்து வெளியேறியது.
இதனால் இம்முறையாவது இங்கிலாந்து அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறுமா என்ற கேள்வியுடன் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்து அணி ஹாரி கேன், பெல்லிம்கம், சாகா, போடன் என்று மொத்த நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கியது. ஆனால் ஸ்லோவாக்கியா அணி 11வது நிமிடத்திலேயே அதிர்ச்சி கொடுத்தது.
தொடர்ந்து ஸ்லோவாக்கியா அணி அட்டாக் செய்ய, சரியாக 25வது நிமிடத்தில் அந்த அணியின் இவான் ஷ்ரான்ஸ் அசத்தலான கோலை அடித்தார். இதனால் ஸ்லோவாக்கியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பின் முதல் பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி எவ்வளவோ முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதன்பின் 2வது பாதி ஆட்டம் தொடங்கியது. இதன் 49வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி கோல் ஒன்றை அடிக்க, அது ஆஃப் சைட் என்று அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 81வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் சாகா உதைத்த பந்து, கோல் போஸ்டில் அடித்து வெளியில் வந்தது. இதனால் இங்கிலாந்து அணி வீரர்கள் பரபரப்பாகினர். 90வது நிமிடம் வரையிலும் கோல் எதுவும் அடிக்கப்படாததால், கிட்டத்தட்ட இங்கிலாந்து அணியின் பயணம் முடிவுக்கு வந்ததாகவே பார்க்கப்பட்டது. இதன்பின் கூடுதல் நேரத்தின் இங்கிலாந்து அணியின் வாக்கர் கொடுத்த த்ரோவை, மார்க் க்யூஹி அசிஸ்ட் செய்ய, பை-சைக்கிள் கிக் மூலமாக பெல்லிங்கம் கோலாக்கினார்.
இதன் மூலமாக ஆட்டம் 1-1 என்ற நிலைக்கு வந்தது. இதன்பின் அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் தரமான ஹெட்டர் மூலம் 2வது கோலை அடித்தார். இதன் மூலமாக இங்கிலாந்து அணி கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின் ஸ்லோவாக்கியா அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்து அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *