ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, ஏப்ரல் 6: பத்து பஹாட் அருகே  கம்போங் பாரு, ஸ்ரீ காடிங்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை அதிகரித்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, கிராமத்தைச் சேர்ந்த 88 குடும்பங்களைச் சேர்ந்த 254 பேர், எஸ்எம்கே ஸ்ரீ காடிங்கில் உள்ள நிவாரண மையத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டபோது 34 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேர் மட்டுமே வெளியேற்றப்பட்டதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், பத்து பஹாட்டில் உள்ள சுங்கை செங்காரங்கில் நீர் எச்சரிக்கை அளவு 3.37 மீட்டரை எட்டியுள்ளது. அதே நேரத்தில் சுங்கை பத்து பஹாட்டில் 2.30 மீட்டராக எச்சரிக்கை நிலை உள்ளது.

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை வானிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்!

Di Kampung Baru, Sri Kading, dekat Batu Pahat, jumlah mangsa banjir meningkat pagi ini kepada 88 keluarga dan 254 orang dipindahkan ke pusat pemindahan. Keadaan cuaca di seluruh negeri dilaporkan baik pada pagi ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *