ஒரே நாளில் ஜொகூரில் 239 சாலை விபத்துகள்! நால்வர் பலி!

- Sangeetha K Loganathan
- 31 Mar, 2025
மார்ச் 31,
ஜொகூரில் கடந்த 24 மணி நேரத்தில் 239 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார். பெருநாள் காலத்தில் அதிகமான வாகங்கள் பயணத்தை மேற்கொள்வதால் மாநிலம் முழுவதும் 4,000 அதிகாரிகள் சாலை போக்குவரத்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தும் 239 சாலை விபத்துகள் நிகழ்ந்திருப்பதாகவும் நால்வர் உயிரிழந்திருப்பதாகவும் Datuk M Kumar தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் ஜொகூர் எல்லை வாயிலாக 20 லட்சம் வெளிநாட்டு வாகனங்கள் பயணித்திருப்பதாகவும் இது சாதாரண நாள்களுடன் ஒப்பிடும்போது 3 மடங்கு அதிகம் என Datuk M Kumar தெரிவித்தார். 239 சாலை விபத்துகளில் பெரும்பாலானச் விபத்துகள் சாலை போக்குவரத்து விதிகளை மீறியதால் நிகழ்ந்திருப்பதாகவும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 1998 அதிகாரிகள் ஜொகூர் முழுவதும் ரோந்து பணிகளில் ஈடுபடவும் Datuk M Kumar உத்தரவிட்டுள்ளார்.
Dalam 24 jam terakhir Johor mencatat 239 kemalangan jalan raya dengan empat kematian kata Ketua Polis Johor, Datuk M Kumar. Peningkatan kenderaan musim perayaan menyaksikan 20 juta kenderaan asing memasuki Johor. Pihak berkuasa mengerahkan 4,000 pegawai trafik untuk penguatkuasaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *