சனி : 12 ஏப்ரல், 2025
03 : 55 : 24 AM
முக்கிய செய்தி

உலுசிலாங்கூர் போலீசாரின் 218ஆம் ஆண்டு போலீஸ் தினம்!

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

உலுசிலாங்கூர், ஏப். 6-

நாடு தழுவிய அளவில் 218ஆம் ஆண்டு போலீஸ் தினம் கொண்டாடப்பட்டது. உலுசிலாங்கூர் மாவட்ட போலீஸ் நிலையத்தில் உலுசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டென் அமாட் பைதால் பின் தரின் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சுமார் 300 போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் உயர் அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

உலுசிலாங்கூர் மாவட்ட போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் அஸ்மான் பின் அப்துல் காரிமுக்கு சிறப்பு சான்றிதழ்களும் பாராட்டையும் சூப்பிரிண்டென் அமாட் பைதால் வழங்கினார்.

மேலும் உலுசிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் சின்னையா மற்றும் பொது இயக்கங்களைச் சேர்ந்த செல்லப்பாண்டியன், சுப்பையா, பரமசிவம் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகளுக்கும் சான்றிதழ்களும் பாராட்டுகளும் வழங்கப்பட்டது.

Hari Polis ke-218 disambut di Ibu Pejabat Polis Daerah Hulu Selangor di bawah pimpinan Supt. Ahmad Faizal. Seramai 300 pegawai hadir dan beberapa individu termasuk pegawai polis serta wakil masyarakat menerima sijil penghargaan atas sumbangan mereka.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *