நான் கோபமாக இருக்கிறேன்! சிலாங்கூர் சுல்தான் காட்டம்!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஜூன் 26: சிலாங்கூர் எஃப்சிக்கு 100,000  வெள்ளி அபராதம் விதிக்கும் மலேசிய கால்பந்து லீக்கின் முடிவு மற்றும் கடந்த மாதம் ஜோகூர் டாருல் தாசிமுக்கு எதிரான போட்டியைத் தவறவிட்டதற்காக மூன்று புள்ளிகளைக் கழிப்பது தொடர்பாக  சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா இன்று தமது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

சிலாங்கூர் ஆட்சியாளருமான சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, மலேசிய கால்பந்து லீக்கின் முடிவு பொறுப்பற்றது மற்றும் இரக்கமற்றது என்று கூறினார்.

MFL முடிவால் தாம் மிகுந்த கோபத்தில் உள்ளதாகவும்,  இது பொறுப்பற்றது என்றும் அவர் சாடினார்.  இது மனிதாபிமானமற்றது என்பதோடு, நடந்த அநீதிகள் குறித்து அக்கறை இல்லாததைக் காட்டுகிறது என்று அவர் முகநூலில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1968 ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் கால்பந்து சங்கம் (FAS) ஹாருன் இட்ரிஸ் தலைமையிலான உள்ளூர் கால்பந்து அரங்கில் தாம்  ஈடுபட்டு வந்ததாகவும், 1990 இல் ஓய்வு பெறும் வரை,, இதுபோன்ற சூழ்நிலையைத் தாம்  பார்த்ததில்லை," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு இனங்கள் மற்றும் மக்களிடையே ஒற்றுமைக்கான களமாக இருக்க வேண்டிய விளையாட்டு, இப்போது வன்முறையால் கறைபட்டுள்ளது வேதனைக்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியா கால்பந்து சங்கத்தின் (FAM) தலைவர் ஹமிடின் அமீன் சிலாங்கூர் கால்பந்து அணியில் அனுபவமும் தொடர்பும் இருந்தும், சிலாங்கூர் எஃப்சிக்காக வாதிடாதது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

ஹமிடின் 1995 முதல் 2013 வரை FAS பொதுச்செயலாளராக பணியாற்றினார் மற்றும் சுல்தான் ஷராஃபுதீனால் அவருக்கு டத்தோஷிப் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவில் கொள்ளுங்கள், நடப்பது இந்த நாட்டில் கால்பந்தின் நம்பகத்தன்மையை மட்டுமல்ல,   சிலாங்கூர் எஃப்சி அணியின் எதிர்கால திசையைக் 'கொல்லும்'," என்று அவர் கூறினார்.

FAS இன் புரவலராக இருக்கும் சுல்தான் ஷராபுதீன், FAS மற்றும் அணித் தலைமையின் ஒரு பகுதியாக இருந்தால், சிலாங்கூர் FC அணியை சூப்பர் லீக்கில் இருந்து வெளியேற்றத் தயங்கமாட்டேன் என்றார்.

கால்பந்து என்பது மலேசியர்களால் விரும்பப்படும் ஒரு விளையாட்டு என்பதை நான் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், மேலும் அது ஓர் உயர்ந்த விளையாட்டுத் திறனை அடிப்படையாகக் கொண்டது.

MFL இன் இந்த தீவிர நடவடிக்கைகள் இந்த உணர்வை பிரதிபலிக்கவில்லை, மேலும் உள்ளூர் கால்பந்தின் நற்பெயரையும் நாங்கள் விரும்பும் விளையாட்டிற்கான பொது ஆதரவையும் சேதப்படுத்தும். எனவே, முடிவுகளை கவனமாக எடுக்க MFL ஐ நினைவுபடுத்த விரும்புகிறேன் என்று சுல்தான் ஷராஃபுதீன் அறிவுறுத்தினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *