அமெரிக்காவின் வரி விதிப்பு;மலேசியாவுக்கு ஓரளவு பாதிப்பு-அன்வார் கருத்து!

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, ஏப். 7-

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அண்மையில் அறிவித்த வரி விதிப்பினால் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி ஓரளவுக்குப் பாதிக்க வேண்டி வரலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார்.

வரிவிதிப்பினால் இதர நாடுகளைப் போன்று மலேசியாவும் பாதித்துள்ளது. ஆகவே, ஆசியானின் அனைத்து உறுப்பு நாடுகளும் தங்களின் வட்டார பொருளாதார உரிமைகளைத் தற்காக்கும் உணர்வைப் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தினால் நாடு எதிர்நோக்கவிருக்கும் பொருளாதார அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றும் அன்வார் கூறினார்.

வரி விதிப்பினால் நமது பொருளாதார வளர்ச்சிக் கணிப்பு சற்று குறைவதற்கு வாய்ப்புள்ளது. நம்முடைய பொருளாதார வளர்ச்சி நன்றாகத்தான் உள்ளது. எதிர்க்கட்சியினரைக் கேட்டால். ரிங்கிட் நாணயத்தின் மதிப்பு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுவார்கள். ஆனால், அது உண்மை அல்ல. பொருளாதாரம் என்பது கிராமங்களில் நடக்கக்கூடிய ஓர் அரசியல் அரட்டையல்ல. புள்ளி விபரங்களையும் உண்மைத் தகவல்களையும் அது அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றார் அன்வார்.

உதாரணமாக, அமெரிக்காவின் வரி விதிப்பு அறிவிப்பினால் மலேசியா உட்பட எல்லா நாடுகளிலும் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. ஆயினும், ஜப்பான், தென் கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் பங்குச் சந்தை ஒரு சிறிய சரிவையே சந்தித்தது. இதன் விளைவை அனைத்து நாடுகளும் எதிர்நோக்கி வருகின்றன.

இதனை சமாளிக்கும் பொருட்டு ஆசியான் நாடுகள் அனைத்தும் தங்களின் சக்தியை ஒன்று திரட்ட வேண்டியது அவசியமாகிறது என்று ஆயர்குரோவில் மலாக்கா அனைத்துலக வர்த்தக மாநாட்டில் நேற்றுமுன்தினம் தேசிய நிலையிலான மடானி நோன்புப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அன்வார் வலியுறுத்தினார்.

மலாக்கா ஆளுநர் துன் முகமது அலி ருஸ்தாம், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி, மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூஃப் யூசோ, தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி பாட்ஸில், அவரின் துணையமைச்சர் தியோ நியே சிங் ஆகியோரும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங், அமைச்சரவை உறுப்பினர்கள், அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் ஆகியோரும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Anwar Ibrahim menyatakan pertumbuhan ekonomi Malaysia mungkin terjejas sedikit akibat tarif Amerika Syarikat. ASEAN disaran bersatu mempertahankan hak ekonomi serantau. Walaupun pasaran saham terjejas, Malaysia alami kejatuhan kecil berbanding negara lain. Kerajaan bincang langkah hadapi tekanan ekonomi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *