புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக்குழாய் வெடிப்பு: எவரும் பலியாகவில்லை போலீஸ் மறு உறுதிப்படுத்தியது!

- Muthu Kumar
- 07 Apr, 2025
சுபாங் ஜெயா, ஏப். 7-
புத்ராஹைட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலியாகியிருப்பதாகச் சமூக ஊடகத்தில் வெளிவந்த தகவலைப் போலீசார் மறுத்துள்ளனர்.அப்பேரிடரில் எவரும் பலியானதாகத் தங்களுக்கு இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
எரிவாயுக் குழாய் வெடிப்பினால் தீக்காயங்களுக்கு ஆளான ஒருவர் நேற்றுமுன்தினம் மரணமடைந்தார் என்று டிக் டாக் பயனர் ஒருவர் சனிக்கிழமை பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.தம்முடைய நண்பரின் இளைய சகோதரர் ஒருவர் அச்சம்பவத்தில் உயிரிழந்து விட்டார் என்று டியா எனும் அந்த டிக் டாக் பயனர் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எனும் இடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த எரிவாயுக் குழாய் வெடிப்பில் காயமுற்ற 145 பேரில் 42 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று நேற்றுமுன்தினம் சுகாதார அமைச்சு குறிப்பிட்டிருந்தது. அவர்களில் 65 வயதான ஒருவர் மட்டுமே தீவிரக் கவனிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Polis menafikan laporan kematian dalam insiden letupan paip gas di Putra Heights, Subang Jaya. Tiada maklumat rasmi diterima. Seramai 42 daripada 145 mangsa masih dirawat di hospital, seorang daripadanya ditempatkan di unit rawatan rapi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *