மற்றவர்களைப் போல நானும் ஹரி ராயாவைக் கொண்டாட நினைத்தேன்! கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேசிய பலூன் வியாபாரி

- Shan Siva
- 06 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்ரல் 6: கோலாலம்பூர் நகர் மன்ற (DBKL) அமலாக்க அதிகாரிகளுடனான மோதலில் காயமடைந்த பலூன் விற்பனையாளர், தன் மீது சுமத்தப்பட்டுள்ள 13 குற்றங்களுக்கான குற்றப் பதிவு குறித்து கருத்து தெரிவிக்கும்போது கண்ணீர் விட்டு அழுதார்.
நான் பலூன்களை
மட்டுமே விற்றேன், போதைப்பொருட்களை
அல்ல. நான் ஒரு முன்னாள் குற்றவாளி என்றால், என்னை அடிக்கலாம், உதைக்கலாம், மூச்சுத்
திணறடிக்கலாமா? என்று முகமது ஜைமுடின்
அஸ்லான் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முழுநேர கோல்ஃப்
வீரரான ஜைமுடின், ஐடில்ஃபிட்ரி
பண்டிகைகளுக்கு முன்னதாக தனது வருமானத்தை அதிகரிக்கவும், ஏப்ரல் 18 ஆம் தேதி
திட்டமிடப்பட்டுள்ள தனது குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு பணம் செலுத்தவும் பலூன்களை
விற்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
எனது கடந்த காலத்தின் காரணமாக
எனக்கு வருமானம் ஈட்ட அனுமதி இல்லையா? என் கடந்த காலத்திற்காக இப்போது என்னை அடிப்பது நியாயமா என அவர் கண்ணீர் மல்கக்
கூறினார்.
இந்த சம்பவம்
தொடர்பாக தன்னையும் தனது குடும்பத்தின் கண்ணியத்தையும் பாதுகாக்க சட்ட நடவடிக்கை
எடுக்கப்போவதாக ஜைமுடின் கூறினார்.
தன்னைக்
கண்டித்தவர்கள் ஒருபோதும் தான் அனுபவித்ததை அனுபவிக்கக்கூடாது என்று
பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்.
நான் எனக்கும் என் குடும்பத்திற்கும் சம்பாதிக்க மட்டுமே முயற்சித்தேன். மற்றவர்களைப் போலவே நாங்களும் ஹரி ராயாவைக் கொண்டாட விரும்பினோம் என்று அவர் கூறினார்!
Seorang penjual belon, Mohamad Zaimudin Aslan, menangis ketika menafikan dakwaan memiliki 13 rekod jenayah. Beliau menjelaskan hanya menjual belon, bukan dadah, demi mencari rezeki untuk sambutan Hari Raya dan kos pembedahan. Zaimudin merancang tindakan undang-undang untuk mempertahankan maruah dirinya dan keluarga.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *