தேசியக் கால்பந்து நிலப்பரப்பை உருவாக்குங்கள்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 30-
 மலேசியக் கால்பந்து சங்கம் (எஃப்ஏஎம்) இனி தேசியக் கால்பந்து நிலப்பரப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளது.
மார்ச் மாத இறுதியில் பரப்பப்பட்ட சில தவறான கடிதங்களில் எழுதப்பட்ட குற்றச்சாட்டுகள் தேசியக் கால்பந்து நிர்வாக குழுவிற்கு பெரும் சுமையாக இருந்தது என்று எஃப்ஏஎம் பொதுச்செயலாளர் டத்தோ நூர் அஸ்மான் ரஹ்மான் கூறினார்.
இந்த சூழ்நிலையால் எஃப்ஏஎம் ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு ‘முடங்கி’ இருந்தது என்றார்.
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் வழங்கிய தெளிவுரையினால் எஃப்ஏஎம் மேல் இருந்த களங்கம் நீக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
நாங்கள் செய்த அனைத்தும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நிர்வாகத்தைப் பொறுத்தவரை, நாங்கள் உலக நிர்வாகக் குழுவின் (பிஃபா) விதிமுறைகளை கடைபிடித்தோம் என்று அவர் கூறினார்.
அனைத்துலக போட்டிகளுக்குத் தேசிய அணியை தயார்படுத்துவது உட்பட எஃப்ஏஎம் தொடர்ந்து எதிர்நோக்கும் என்று நூர் அஸ்மான் கூறினார்.
ஹரிமாவ் மலாயா அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. பின்னர் 20 வயதுக்குட்பட்ட, 17 வயதுக்குட்பட்ட அணிகள், ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு (ஏஎஃப்எஃப்) கோப்பைக்கும் இன்னும் பல போட்டிகளுக்கும் தயாராக வேண்டும் .
நேற்று முன்தினம்  புத்ராஜெயாவில் உள்ள தேசிய பயிற்சி மையத்திற்கான 25 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான டெண்டர் செயல்பாட்டில் அதிகார துஷ்பிரயோகம், நிறுவனத்திற்கு பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எம்ஏசிசி விசாரணை நடத்தியதாக எஃப்ஏஎம்  ஒருமைப்பாடு குழு தெரிவித்துள்ளது.
குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆசே சே மாட் கூறுகையில், இரண்டு விஷயங்களிலும் விசாரணைகள் முடிக்கப்பட்டு,  துணை அரசு  வழக்கறிஞரிடம் அனுப்பப்பட்டதாகவும், அவர் எம்ஏசிசியின் விசாரணையின் முடிவில் திருப்தி அடைந்து வழக்கை என்எஃப்ஏ என வகைப்படுத்த முடிவு செய்ததாகவும் கூறினார்.
எஃப்ஏஎம் பொதுச்செயலாளரால் அதிகார துஷ்பிரயோகம், ஊழியர்களின் சம்பள,  சலுகைகள், ஹரிமாவ் மலாயா அணி,  என்திசி திட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகியவை எழுப்பப்பட்ட நான்கு முக்கிய பிரச்சினைகளுக்கு எம்ஏசிசி முடிவுக்குக் கொண்டுள்ளதாகவும் இனி தேசியக் கால்பந்து நிலப்பரப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *