சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 15வது முறையாக வென்றது ரியல் மாட்ரிட் அணி!

top-news
FREE WEBSITE AD

சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 15வது முறையாக வென்றது ரியல் மாட்ரிட் அணி.

லண்டனில் உள்ள வெம்ப்ளே மைதானத்தில் ஐரோப்பிய கிளப் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பைனல் நடந்தது. இதில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), பொருஷியா டார்ட்மண்ட் (ஜெர்மனி) அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதல் பாதியில் டார்ட்மண்ட் ஆதிக்கம் செலுத்தியது. 'பினிஷிங்' திறன் இல்லாததால் கோல் வாய்ப்புகள் வீணாகின. நிகோலஸ் புல்கிரக் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு திரும்பியது. மாட்ரிட் அணி கோல்கீப்பர் கோர்டோய்ஸ் துடிப்பாக செயல்பட, முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்ற ரியல் மாட்ரிட் அணிக்கு டேனியல் கர்வாஜல் (74வது நிமிடம்) தலையால் முட்டி முதல் கோல் அடித்தார். தொடர்ந்து வினிசியஸ் ஜூனியர் (83) ஒரு கோல் அடிக்க, ரியல் மாட்ரிட் 2-0 என வலுவான முன்னிலை பெற்றது. இதற்கு டார்ட்மண்ட் அணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என வெற்றி பெற்று, சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 15வது முறையாக தட்டிச் சென்றது. 86,000 ரசிகர்கள் முன், கோப்பை வென்ற மகிழ்ச்சியுடன் ரியல் மாட்ரிட் அணியின் மத்திய கள வீரர் டோனி குரூஸ் ஓய்வு பெற்றார்.

ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக 5வது கோப்பை வென்ற கார்லோ ஆன்சிலோட்டி கூறுகையில்,''கோப்பை வெல்வது வழக்கமாகிவிட்டது. எங்களது கனவு பயணம் தொடர்கிறது,'' என்றார்.

பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியில் இருந்து விலகிய பிரான்ஸ் கேப்டன் எம்பாப்வே, விரைவில் ரியல் மாட்ரிட் அணியில் இணைய உள்ளார். இதனால் ரியல் மாட்ரிட் அணியின் பலம் அதிகரிக்கும்.

இது குறித்து மாட்ரிட் அணி தலைவர் புளாரன்டினோ பெரேஸ் கூறுகையில்,''புதிய வீரர் வரவு பற்றி தற்போது உறுதி செய்ய முடியாது. வீரர்கள் வருவார்கள்,போவார்கள் ஆனால் சாம்பியன்ஸ லீக் அரங்கில் எங்களது ஆதிக்கம் தொடரும். சாம்பியன்ஸ் லீக் கோப்பை, ரியல் மாட்ரிட் இடையிலான காதல் கதை இனிமையானது,''என்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *