KETUM விற்பனையில் ஈடுபட்ட நால்வர் கைது!

- Sangeetha K Loganathan
- 15 Mar, 2025
மார்ச் 15,
கிளாந்தானில் சட்டவிரோதமாக கெத்தும் போதை நீரை விற்பனை செய்த 4 உள்ளூர் ஆடவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக மாச்சாங் மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Shafiki Hussin தெரிவித்தார். சந்தேக நபர்கள் நால்வரும் மாச்சாங் பகுதியில் கெத்தும் போதை நீரை விற்பனை செய்து வருவதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் Kampung Pangkal Mempelam குடியிருப்புப் பகுதியில் உள்ள அவர்களின் வீட்டைச் சோதனை செய்ததாக Ahmad Shafiki Hussin தெரிவித்தார்.
சோதனையின் போது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் 855 லிட்டர் கெத்தும் போதை நீரைப் பறிமுதல் செய்ததாகவும் வீட்டிலிருந்த 24 முதல் 54 வயதுடைய நான்கு உள்ளூர் நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் Ahmad Shafiki Hussin தெரிவித்தார். கெத்தும் போதை நீரைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டும் கருவிகளையும் பறிமுதல் செய்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கருவிகளின் மொத்த மதிப்பு RM26,640 என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் மாச்சாங் மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Shafiki Hussin தெரிவித்தார்.
Polis menahan empat lelaki dan merampas 855 bungkus air ketum serta peralatan bernilai RM26,640 dalam serbuan di sebuah kandang lembu di Machang. Serbuan oleh Jabatan Siasatan Jenayah Narkotik IPK Kelantan dibuat hasil maklumat awam. Dua suspek mempunyai rekod kesalahan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *